ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை தாக்கிய 20 மாணவர்கள்

ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை 20 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;

Update: 2024-11-11 03:30 GMT

காயமடைந்த மாணவன்.

ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவரை 20 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு சேனாபதிபாளையத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏவுக்கு சொந்தமான தனியார் இயங்கி வருகிறது. அங்கு, ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அண்மையில் பள்ளி விடுதியில் சேர்ந்துள்ளார். 

இந்நிலையில், விடுதியில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் கூட்டாக சேர்ந்து அந்த 10 வகுப்பு மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அந்த மாணவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இச்சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து மாணவரை பார்க்க சென்ற பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவனை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மேலும், மாணவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

பின்னர், இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், விடுதியில் ராக்கிங் எதுவும் நடக்கவில்லை. மாணவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையிட்டுக் கொண்டதாகவும், இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. 

மேலும், இதுகுறித்து 10ம் வகுப்பு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News