ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-09-12 10:45 GMT
மது விற்ற பெருமாள் என்பவரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் நேற்று ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஈரோடு, பவானி, தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய ரெய்டில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News