ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 20 சென்ட் இடம் மீட்பு
ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட 20 சென்ட் இடத்தை வருவாய்த் துறையினர் இன்று (டிச.21) மீட்டனர்.
ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட 20 சென்ட் இடத்தை வருவாய்த் துறையினர் இன்று (டிச.21) மீட்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெருந்துறை செல்லும் சாலையில் அமைந்துள்ள கீழ்திண்டல் பகுதியில் அரசுக்கு சொந்தமான 20 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுகுறித்து, அறிந்த வருவாய்த்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அளவீடு செய்தனர்.
அப்போது சொந்தமான 20 சென்ட் இடத்தை அதைப் பகுதியைச் சேர்ந்த 4 பேர் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவர்களிடம் எடுத்து கூறியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இடத்தை மீட்டு வருவாய்த்துறை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற 7 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று (டிச.21) காலை ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்றினர். இதற்காக பணியாளர்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கடைகள், வீடுகளை இடித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும், மீட்கப்பட்ட அந்த இடம் மீட்கப்பட்டு இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.