அந்தியூரில் செல்போன் கடையில் செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்

அந்தியூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 3 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள இயர் போன்களை திருடிய 2 சிறுவர்கள் சிக்கினர்.;

Update: 2022-05-24 11:45 GMT

அந்தியூர் காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே ஆத்தப்பம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (32) என்பவர் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி செல்போன் கடையின் பூட்டை உடைத்து, 3 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயர் போன் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தினேஷ் என்பவரின் கடையில் செல்போன்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News