சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2022-06-02 11:00 GMT

போலீசாரால் கைது செய்யப்பட்ட மனோஜ்,  தாலிப்ராஜா.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் பிரிவு, காளிங்கராயன் பாளையம், நசியனூர் உள்ளிட்ட இடங்களில் பெண்களிடம் நகை நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் லட்சுமி நகரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சந்தேகத்துக்குரிய வகையில் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தாலிப்ராஜா ஆகிய இருவரும் கோவை சிறையில் நண்பர்களாகி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமும் இருந்து 11 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்து நகை பறிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News