ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 1.75லட்சம் பேர் செலுத்தவில்லை

ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியினை 1.75 லட்சம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-04-26 12:45 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 34 ஆயிரத்து 340 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 90.32 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசியை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சத்து 11 ஆயிரத்து 320 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது 72 சதவீதம் ஆகும்.

மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 75 ஆயிரத்து 59 பேர் செலுத்தி கொள்ள வில்லை என்றும், 2-ம் 3 தவணை தடுப்பூசியை 3 லட்சத்து 39 ஆயிரத்து 903 பேர் செலுத்திக் கொள்ளவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அல்லது அரசு மருத்துவமனையில் சென்று செலுத்திக் கொள்ளலாம் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News