அந்தியூர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த 172 மாணவ, மாணவியர்
Student Admission -புதிதாக தொடங்கப்பட்ட அந்தியூர் கலை அறிவியல் கல்லூரியில் 172 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
Student Admission -இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-2022 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது ஈரோடு மாவட்டம் தாளவாடி, அந்தியூர் உள்பட 10 மாவட்டங்களிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 7 ஆம் தேதி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் பிரிவில் 19 மாணவர்கள் 41 மாணவிகளும், ஆங்கிலம் பிரிவில் 11 மாணவர்கள் 13 மாணவிகளும், வணிகவியல் பிரிவில் 30 மாணவர்கள் 27 மாணவிகளும், கணினி அறிவியல் பிரிவில் 11 மாணவர்கள் 16 மாணவிகளும், கணிதம் பிரிவில் ஒரு மாணவர் 3 மாணவிகள் என மொத்தம் 172 பேர் பயின்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2