ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 168 மனுக்கள்

Grievance Complaint - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 168 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2022-08-30 05:30 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.

Grievance Complaint -ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 168 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சரின் தனிப் பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News