ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஈரோடு வழியாக கன்னியாகுமரி சென்ற ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
ஈரோடு வழியாக கன்னியாகுமரி சென்ற ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அசாம் மாநிலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், அந்த ரயிலில் போலீசார் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.
அப்போது, பொதுப்பிரிவு பெட்டியில் கழிப்பறை அருகில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை யாரும் உரிமை கோராததால் போலீசார் அதை திறந்து பார்த்தனர். அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது. மொத்தம் 14 கிலோ கஞ்சா ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.