அந்தியூரில் ரூ.1.47 கோடி மதிப்பு கப்பி சாலை பணிகள் துவக்கம்
பர்கூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள கத்தரிமலையில், இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அப்போது, கத்திரிமலையில் உள்ள மாதம்பட்டி மற்றும் மழையும் பட்டியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களிடம் சத்துணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், சென்னை தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படும் இணையவழி பயிற்சியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்களை வழங்கி பேசினார். முன்னதாக, கத்திரிப் அட்டவணைகளை முதல் இசுலாம் காடு வரை அமைக்கும் கப்பி சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் கத்திரிமலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோபி வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவி அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் சிவபிரசாத் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.