ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,261 பேருக்கு கொரோனா; இருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் 1,261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது;

Update: 2022-01-28 15:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி புதிதாக மேலும் 1,261 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 689 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 937 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 515 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி 74 வயது முதியவர் ஒருவரும், நேற்று 72 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு 724 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது தொற்று உள்ள 8 ஆயிரத்து 450 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News