கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல்
ஈரோடு மாநகரில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.;
ஈரோடு மாநகரில் கடந்த ஒரு வாரத்தில், முக கவசம் அணியாமல் மற்றும் முறையாக முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களை அனுமதித்த வணிக நிறுவனங்களுக்கு என இதுவரை ரூ.1லட்சத்து 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், கடைகளில் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தியிருந்தால் மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்த உரிமையாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.