கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் கோபியில் மீட்பு
கோபி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த கோவையை சேர்ந்த 12 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்.;
கோபி பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு சிறுவன் சுற்றி திரிந்து கொண்டிருந்தான். விசாரணையில், அவன் கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் என்பதும், இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி கோபிக்கு வந்ததும் தெரியவந்தது.அதைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் மீட்டு கோபி நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் சிறுவனின் தாய் கோபிக்கு வந்தார். அவரிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர்.