ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு, கணினி சுழற்சி முறையில் முதற்கட்ட பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.;

Update: 2025-01-12 08:15 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் முதல் கட்ட பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு, கணினி சுழற்சி முறையில் முதற்கட்ட பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடி மையங்கள் 237 அல்லாமல் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 284 முதன்மை அலுவலர்களும், 284 முதல் நிலை அலுவலர்களும், 284 இரண்டாம் நிலை அலுவலர்களும், 284 மூன்றாம் நிலை அலுவலர்களும், மேலும், 1200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 58 நான்காம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 

இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் முதல் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி இன்று (ஜன.12) நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இப்பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 19ம் தேதி ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் மரு. நாரணவ்ரே மணிஷ் சங்கரராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் (ச.பா.தி) தியாகராஜன், அலுவலக மேலாளர்(பொது) பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட தேர்தல் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News