ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சித்தோடு அடுத்த பாலா காட்டூர் அப்பகுதியில் ஒரு இடத்தில் ஒரு கும்பல் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை கவனித்த போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காதர், கார்த்தி, இனியாசா, சங்கர், சுல்தான் முஸ்தபா, மணிகண்டன், பெரியசாமி, பிரபு, தீனதயாளன், பிரபு, வீரபத்திரன் ஆகிய 11 பேர் என தெரிய வந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.