அந்தியூர் அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போராட்டம்
பர்கூர் மலைப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்ககோரி அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போராட்டம்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், அப்பகுதி பொதுமக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கவில்லை. இதனால், பர்கூர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
இந்தநிலையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பர்கூர் மலைப் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை குவிந்தனர்.அங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.