பவானி நகராட்சியில் காலை 10 மணி வரை 10 சதவீதம் வாக்குப்பதிவு
ஈரோடு, பவானி நகராட்சியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது 10 மணி வரை 10% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் 12 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 36 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஆண் பெண் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். ஆண் பெண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 18 வயது பூர்த்தியான வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள் முதியவர்கள் என அனைவரும் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு சேனிடைசர் மற்றும் முக கவசம் உள்ளிட்டவைகள் சுகாதாரத் துறையினர் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடைபெற்றுவரும் வாக்குப்பதிவில் தற்போது வரை மூன்று மணி நேரம் நடைபெற்ற வாக்குப்பதிவில் 10 விழுக்காடு மட்டும் வாக்குகள் பதிவாகியுள்ளது.