பெருந்துறை அருகே ஈங்கூரில் நாளை (மே.16) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈங்கூரில் நாளை (மே.16) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.;
பெருந்துறை அருகே ஈங்கூரில் நாளை (மே.16) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பெருந்துறை தெற்கு பகுதி, தோப்புபாளையம், கொங்கு காலேஜ், பெருந்துறை ஹவுசிங்யூனிட், பெருந்துறை ஆர்.எஸ்., நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, பாலப்பாளையம், கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம் மற்றும் 1010 நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் நாளை (மே.16) வெள்ளிக்கிழமை மின்தடை அறிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் வழக்கம் போல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.