கோபி: கொளப்பலூர் பேரூராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் பேரூராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோபி அருகே கொளப்பலூர் பேரூராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் காமராஜ் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சுமதி. சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சுமதி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட் டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிறுவலூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.