அம்மாபேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: தமாகாவினர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று தமாகாவினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமாகாவினரை படத்தில் காணலாம்.
அம்மாபேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று தமாகாவினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மார்ச் 3ம் தேதி) நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சேர்ந்த மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து ஆட்சியர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டம் மேட்டூர் சாலையில் புதிதாக சுங்கச்சாவடியை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேட்டூர், குளத்தூர், மேச்சேரி போன்ற பகுதியில் இருந்து அன்றாடம் மக்கள் பவானி மற்றும் ஈரோடு பகுதிக்கு வேலைக்காகவும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
மேலும், விவசாய பொருட்கள் கொண்டு செல்லவும்,பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமணைக்கு செல்லவும் அந்தப் பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் அச்சாலையை பயன்படுத்துகிறார்கள்.
இந்த சாலை விரிவாக்க பணிகளோ, நான்கு வழி சாலைகளோ போடப்படாமல் அந்தப் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து வருகிறார்கள். மத்திய மாநில அரசு உடனடியாக தலையிட்டு அதை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மூத்த தலைவர் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், வட்டார தலைவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.