கொடைக்கானல் படகு இல்லங்களின் சேவைக்கான கட்டணம் பல மடங்கு உயர்வு
கொடைக்கானல் படகு இல்லத்தில் பயணிக்க சேவைக் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் கடந்த 120 நாட்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் காணப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று குறையா துவங்கி உள்ளதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதனால் இங்கு உள்ள படகு தளங்களில் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பு நடந்து வருகிறது. அதாவது சாதாரணமாக 100 ரூபாயாக இருந்த கட்டணம் வார நாட்களில் 150 ரூபாயாகவும், வார இறுதி நாட்களில் 200 ரூபாயாகவும், பண வசதி படைத்தவர்கள் வரிசையில் நிற்காமல் உடனடியாக படகில் ஏற 250 ரூபாயாக கட்டணம் உயர்த்தி வாங்கப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.