திண்டுக்கல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்பு
திண்டுக்கல் அருகே ரெட்டியார் சத்திரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 59 ஏக்கர், 64 சென்ட் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 59 ஏக்கர், 64 சென்ட் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன.
திண்டுக்கல் அருகே வித்தியாசத்தில் உள்ள கோபிநாத சுவாமி கோவில், இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலின் கட்டுப்பாட்டில், குச்சலுப்பை பெருமாள், இடையக்கோட்டை செல்லாண்டி அம்மன், சித்தையன் கோட்டை வரதராஜப்பெருமாள் ஆகிய 3 கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் கோவில் நிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கோவில்களுக்கு சொந்தமான 59 ஏக்கர், 64 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததை மீட்டு அந்த நிலங்களில், இது இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நிலங்கள் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளும் வகையில் பொதுமக்கள் பார்வைக்காக வெளிப்படையாக இணையதளத்தில்இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் தமிழக அரசால் மீட்கப்பட்டு வருகின்றன.மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 100க்கும் அதிகமான திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு ? எந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ? மதிப்பு எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிட்டது இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in/hrcehome/landretrieval_search.php இணையதளம் சென்று பொதுமக்கள் கோயில் நிலம் மீட்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே திருக்கோயிலுக்கு சொந்தமான நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலம் மீட்பு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.