ஆத்தூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா..!

Update: 2024-06-06 07:47 GMT

ஆத்தூரில் மரக்கன்று நடுவிழா.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 6ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பாவை பவுண்டேசன் சார்பாக "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற வாசகத்தை மையப்படுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன.

அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர். அரவிந்த் நாராயணன், டாக்டர்.லியோன் வினோத்குமார், டாக்டர்.சந்தோஷ் குமார்,தலைமை செவிலியர் சகிலா பான் மற்றும் செவிலியர்கள், சித்தா பிரிவு மருந்தாளுனர் மனோகரன், அலுவலக கண்காணிப்பாளர் தேவி, உதவியாளர் சுரேஷ், நம்பிக்கை மையம் மற்றும் காசநோய் பிரிவு பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் சூற்றுசூழல் சார்ந்த விழிப்புணர்வு பணியில் பங்கேற்று, "ஆளுக்கொரு மரக்கன்றை நட்டு" நிகழ்வினை சிறப்பித்தனர்.

சமூக ஆர்வலர் ஆசிரியர் ராமு மற்றும் கண்ணன் ஆகியோர் மரக்கன்று நடுவதற்கான ஒருங்கிணைப்பு பணிகளையும், பாவை பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் நிகழ்விற்கான ஏற்பாடுகளையும், செய்திருந்தனர். இந்த நிகழ்வில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

Similar News