திண்டுக்கல் மாவட்டத்தில், மலைப் பகுதிகளில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு

திண்டுக்கல் அருகே சிறுமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.;

Update: 2023-08-06 13:35 GMT

திண்டுக்கல் சிறுமலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிதுநேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகின. மேலும் மலைப்பகுதியில் உள்ள மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து வருகின்றன. தொடர்ந்து, மலைப்பகுதியில் தீ எரிந்தது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சிறுமலை பகுதியில் சமீபகாலமாக அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் காட்டுத்தீயில் மரங்கள் எரிந்து சேதமாகின.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்திற்குட்பட்ட, மலைப்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பற்றி எரிந்த காட்டுத் தீயில், ஏராளமான மரங்கள் எரிந்து சேதமானது.

Similar News