ஒட்டம் சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து: பலத்த சேதம்

ஒட்டன்சத்திரம் அருகே கோழிப் பண்ணையில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பண்ணையில் இருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின.

Update: 2023-08-26 12:23 GMT

ஒட்டன்சத்திரம் அருகே ,கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சியை சேர்ந்த செந்தில்நாதன்(55). இவர், அப்பகுதியில் தோட்டத்தில் தகர மேற்கூரை அமைத்து, அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.

இந்தநிலையில், அவரது கோழிப்பண்ணை திடீரென்று தீப்பற்றி எரிந்தது. தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றியும், மண்ணை கொட்டியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வைக்கோல் படப்பிலும் பற்றிக்கொண்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் , சுமார் அரை மணி நேரம் போராடி பண்ணையிலும், வைக்கோல் படப்பிலும் எரிந்த தீயை அணைத்தனர்.

இருப்பினும், பண்ணையில் வளர்ப்பதற்காக விடப்பட்டிருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின. அதேபோல், வைக்கோல் படப்பும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

நிலக்கோட்டை பகுதியில் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்:

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கி நாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், அப்பாபிள்ளைபட்டி, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிகாலாடிபட்டி, அவ்வையம்பட்டி, மணியக்காரன்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னம நாயக்கன்கோட்டை, கோட்டூர், என்.ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை, வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்-வேளாங்கண்ணி இடையே வருகிற 28ம் தேதி முதல் 60 சிறப்பு பேருந்துகள்  

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் வருகிற 28ம் தேதி முதல் 9ம் தேதி வரை 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. மேலும் , பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக திண்டுக்கல், வேளாங்கண்ணியில் ஒரு மேலாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று, மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News