ஒட்டன் சத்திரம் அருகே மகளிர் உரிமைத் தொகை வழங்கல்

1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 -ம் வழங்கப்படுகிறது

Update: 2023-09-16 06:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் ,ஒட்டன்சத்திரம் அருகே ,மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவில் பேசுகிறார் அமைச்சர் சக்கரபாணி .

ஒட்டன் சத்திரம் அருகே நடந்த விழாவில்  அமைச்சர் சக்கரபாணி  மகளிர் உரிமைத் தொகை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை, காஞ்சிபுரம் மாவட்டத்தில்(15.9.2023) தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை அமைச்சர்கள், மக்கள் பிரநிதிகள் தொடக்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, புஷ்பத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கி பேசினார்.

அருகில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச. காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக்முஹைதீன், பழனி வருவாய் கோட்டாட்சியர் சௌ. சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் இரா. சத்திய புவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கா. பொன்ராஜ் ,தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர்      பி.சி.தங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் க.கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்ட தொடக்கத்தில் அடையாளமாக 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது என முதல்வர் அப்போது தெரிவித்தார்.

Tags:    

Similar News