இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

Update: 2023-11-14 09:30 GMT

பைல் படம்

இரு சக்கர வாகனத் திருட்டு- இருவர் கைது:

திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(53) இவர் தனது வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதுகுறித்து நகர் டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சார்லஸ் பிரிட்டோ(32) நந்தகுமார்(24) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்  ஆத்தூர் அருகே ஆண் சடலம் மீட்பு:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில், மர்மமான முறையில் புதருக்குள் சாக்கு முடையில் கட்டி வீசி எறியப்பட்ட 40 வயதுடைய ஆண் சடலம்.முற்றிலும் அழுகிய நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து,செம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரண நடத்தி வருகின்றனர்.

கந்தசஷ்டி தொடக்கம்:

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல்லை அடுத்த  திருமலைக்கேணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.முருகப்பெருமானுக்கு 16 வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

Tags:    

Similar News