திண்டுக்கல் மாவட்ட செய்திக் கதம்பம்
கன்னிவாடி பகுதியில் நாளை மின்தடை உள்பட பல்வேறு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்
கொலை முயற்சி வழக்கில் அண்ணன்,தம்பி மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது
திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் சத்ரியன் மற்றும் ஆதித்யன் இவர்களை, அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மேலும், இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, சத்ரியன் மற்றும் ஆதித்யன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து, அம்மையநாயக்கனூர் காவல்துறையினர், சத்ரியன் மற்றும் ஆதித்யன் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் உள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டம், திங்கட்கிழமை நடக்க உள்ளது. இன்று நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு சடையபிள்ளை வெங்கடேஷ் ஆகியோர்கள் ஏற்கெனவே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து மீண்டும் மீண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசியும் மனுக்கள் கொடுத்தும் அரசு அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் சில நீண்ட நான் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் கவனத்திற்கும் தெரிவிக்கின்றேன் வனவிலங்குகளால் விவசாயிகள் நிலத்தை சேசப்படுத்துவதை அரசு தடுத்திடவேண்டும்.
முறையான இழப்பீடு வழங்க வேண்டும். மரக்கடத்தலை தடுத்திடவேண்டும். விவசாயிகளுக்கு அரசு வழங்கும் உதவிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும் கொடைக்கானல் மேல்மலை தாண்டிக்குடி போன்ற கீழ்ப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கும் போர்வண்டிகள் ஹிட்டாச்சி , ஜெசிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதி பெறாமல் இயங்கும் காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீதும் இன்னும் நடவடிக்கை இல்லை அதேபோல், தாண்டிக்குடியில் திறப்பு விழா செய்து விட்டு பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் இ- சேவை மையத்தை உடனே திறந்திடவேண்டும்
தாண்டிக்குடி ஊராட்சியில், சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாதி அகற்றி விட்டு மீதியை அகற்ற மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் பாரபட்சமின்றி அகற்றிடவேண்டும். தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும், தாண்டிக்குடி ஊராட்சியில், சீரான குடிநீர் வசதி சாலைவசதி கழிப்பறை சாக்கடை வசதி மற்றும் நிழற்குடை வசதி செய்து தரவேண்டும்.
பொதுமக்கள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கும் அதிகாரிகள் மீதும் எங்கள் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது போன்ற பல்வேறு பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்து வருவதால், நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்து இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி விட்டார்கள்.
எனவே ,நமது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தும் அரசு அதிகாரிகளும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏற்கனவே, விவசாயிகள் கொடுத்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய பதில் கடிதம் அனுப்பிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டம் முறையாக நடத்தி விவசாயிகள் குறைகளை
நிவர்த்தி செய்து கொடுத்திடவேண்டும்.அதன்மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமாக நடந்தால் தான் விவசாயிகள் அதிகமாக வருவார்கள் இல்லாவிட்டால் யாரும் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து அரசு அதிகாரிகள் அடுத்த மாத செப்டம்பர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் போது விவசாயிகளின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உத்தரவிடவேண்டும் அதன்மூலம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.