திண்டுக்கல் மாவட்ட செய்தி துளிகள்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்

Update: 2023-09-29 09:15 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப்பயணிகள்

சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரியில் காரில் வந்து 250 லிட்டர் டீசல் திருடிய கும்பல்:

திண்டுக்கல்லை அடுத்த கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் திருச்சி, தொட்டியம் ஏழுர்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(36) என்பவர் இரவு லாரியை நிறுத்திவிட்டு தூங்கி விட்டார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, லாரி டேங்கில் இருந்த 250 லிட்டர் டீசல் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சாணார்பட்டி  காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், லாரியில் இருந்த டீசலை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும். இதற்கிடையே அங்கு பரிசல் சவாரி இயக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, மாவட்ட வன அலுவலர் ரூபேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில், பரிசல் சவாரி தொடங்கியது. இதனை வனச்சரகர் சுரேஷ்குமார் பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.

கொடைக்கானல் நகராட்சியின் மூலம் சுங்கச்சாவடி வரி இன்று அமல்படுத்தப்பட்ட நிலையில் சுங்கச்சாவடியில், இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News