பழனியில் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
பழனியில் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
பழனியில் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில், கடந்த மாதம் பழனி-கொடைக்கானல் சாலை பகுதியில் மருத்துவர் நகரை சேர்ந்த முத்தையா(வயது45) என்பவர் நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி(46), தீபக்குமார் (24), முனிச்செல்வம் (30), பாண்டித்துரை (25) விஜய்(26), சபரிநாதன்(25) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி,ஆறு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பழனி போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
வத்தலகுண்டு அருகே மாட்டு கொட்டகையில் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் தீயணைப்புதுறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், இன்று அதிகாலை மாடுகளுக்கு வைக்கோல் போட மாட்டு கொட்டகை சென்றபோது, அங்கு 7 அடி நீள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியை வைத்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.