நிலக்கோட்டை அருகேயுள்ள ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா ?

நிலக்கோட்டை அருகேயுள்ள விராலிப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளின்றி இருப்பதால் அமைச்சர் கவனிக்க வேண்டுமென கோரியுள்ளனர்

Update: 2023-12-03 04:30 GMT

அடிப்படை வசதிகள் இல்லாத விராலிபட்டி ஊராட்சி.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விராலிப்பட்டி ஊராட்சியில், எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி காணப்படுகிறது. கிராமங்களை இணைக்கும் தார் சாலைகள் அமைக்காமல் மண்பாதையாக செயல்படுகிறது. ஆங்காங்கே சாக்கடைகளை பராமரிக்காமல், சாக்கடை நீர் தேங்கி இருப்பதால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள கிராம

வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் ஆதாயம் உள்ளது. ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை பராமரிக்காமல், இரவு எரிவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். கிராமங்களில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்து வரும் இந்த சமயத்தில், விராலிபட்டி ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோளாகும்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News