திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு :அமைச்சர் பங்கேற்று துவக்கம்
Minister Pongal Gift Inauguration ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில், 6,79,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.67.95 கோடி மதிப்பிலான ரொக்கத்தினையும் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்:
Minister Pongal Gift Inauguration
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், வத்தலக்குண்டு பேரூராட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரொக்கப்பணம் ரூ.1000/-, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், ஒரு முழு நீளக்கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை இன்று (10.01.2024) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் வாயிலாக இயங்கும் 1004 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக இயங்கும் 19 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக இயங்கும் 12 நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக்கடைகளின் மூலமாக ரொக்கப்பணம் ரூ.1000/-, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் ஒரு முழு நீளக்கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகின்ற பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ,தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்று வருகிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர், நிறைவேற்றி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் மனுக்கள் கொடுத்தால் தகுதியான நபர்களுக்கு பரிசீலினை செய்யப்பட்டு வழங்கப்படும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் இருந்த போது, 24 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர், பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். கல்லூரியில் படிக்கும் 18 இலட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் 50 ஆண்டு காலத்தில் செய்யாத திட்டங்களை கல்விக்காக செய்திருக்கிறார்.
தற்போது, நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக லட்சம் வேலைவாய்ப்பினை உருவாக்கும் தொலை நோக்கு திட்டத்தினை உருவாக்கி உள்ளார். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக் எல்லாம் சிறந்த முதலமைச்சராக, தமிழ்நாடு முதலமைச்சராக திகழ்கின்றார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தொலைகாட்சி பெட்டிகள் மற்றும் எரிவாயு அடுப்பு கொடுத்த அரசு என்ற பெருமை உள்ளது. அதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முதலில் வழங்கப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவமான உரிமைகள், ஏழை முதல் பணக்காரர்கள் வரை சமமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக்கூடிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் ,அரசு. எல்லா நிலைகளையும் உயர்த்தி செயல்படுகின்ற அரசிற்கு பொதுமக்கள் அனைவரும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் 1004 நியாவிலைக் கடைகளில் 6,46,259 குடும்ப அட்டைதாரர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 19 நியாவிலைக் கடைகளில் 22,572 குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் சுயஉதவிக்குழு 12 நியாவிலைக் கடைகளில் 10,705 குடும்ப அட்டைதாரர்கள் என , மொத்தம் 6,79,536 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.67.95 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, இன்றைய தினம் விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. என , ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன், நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கொடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.