திண்டுக்கல் அருகே நேரிட்ட வெடி விபத்தில் இருவர் மரணம்: போலீஸார் விசாரணை
சித்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகளுக்காக வெடி தயாரிக்கும் போது வெடித்து 2 பேர் உயிரிழந்தனர்;
சித்தூர் அருகே வெடி தயாரிக்கும் போது நேரிட்ட விபத்தில் 2 பேர் உ.யிழப்பு
திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி அருகே சித்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகளுக்காக வெடி தயாரிக்கும் போது, வெடி வெடித்து சிவராஜன்(22), கண்ணுசாமி(30) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்..இது குறித்து, பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலகுண்டு அருகே நாய் குறுக்கே வந்ததால், அரசு பேருந்து - மில் வேன் மோதி விபத்து10 பேர் படுகாயம்
திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே முத்தலாபுரம் பாலத்தில் நாய் குறுக்கே வந்ததால், தேனியில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து தனியார் - மில் வேன் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது,இந்த விபத்தில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து, பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாணார்பட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த சாணார்பட்டி அடுத்த ராகலாபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(23). என்பவரை, சாணார்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் , மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், சந்தோஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.