திண்டுக்கல் அருகே பாறைகள் சாலையில் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் அருகே பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-11-09 10:07 GMT

திண்டுக்கல் அருகே பலத்த மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்.

திண்டுக்கல்லை அடுத்த பெரும்பாறை அருகே தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் கிடந்தன. இதனால், பஸ், லாரி, கார், ஜீப், போன்ற வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன.

எனவே இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தி, மேலும், அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகை திருடிய 3 பெண்கள் கைது

நிலக்கோட்டையை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (வயது34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்ததை கையும் களவுமாக பிடித்த கணேஷ்பாண்டி நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் அந்த பெண்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராக்கம்மாள் (60), விஜயா (58), நதியா (38) என தெரியவந்தது. 3 பெண்களையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் மீது மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

10 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார்,  முரளிதரன், லோகேஸ்வரன், தியாகராஜன் ஆகியோர் கொண்ட குழு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News