கைம்பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

ரூ.70 ஆயிரம் மதிப்பில் 140 கைம்பெண்களுக்கு நிவாரணப் பொருட்களை டிஐஜி விஜயகுமாரி வழங்கினார்.;

Update: 2021-08-26 16:00 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிஐஜி விஜயகுமாரி. 

எழுத்தாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான முத்துப்பாண்டி ஏற்பாட்டில் திண்டுக்கல்-தேனி சரக டிஐஜி விஜயக்குமாரி தலைமையில் சுமார் 70-ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுமார் 140 கைம்பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் போர்வை வழங்கப்பட்டது. மேலும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன நான்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் காவலர்கள் தயாநிதி உட்பட முக்கிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News