பிளாஸ்டிக் அரிசி வினியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் நடந்த சில செய்திகளை இங்கே காணலாம்;
நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பரவிய வதந்தியால் வீடு வீடாக பொதுமக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ,எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, பிளாஸ்டிக் அரிசி இதில் கலந்துள்ளதா என, சந்தேகமடைந்து ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிஉள்ளதாக வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து, நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி ரேசன் கடைகளில் ஆய்வு செய்தார்.
அதில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எஸ்.ஐ. பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளை கடந்தும் ஆய்வாளர் பதவி உயர்வின்றி 1,026 பேர் காத்திருப்பு
கடந்த 2011 ல் தமிழக அளவில் 1026 பேர் நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், 10 ஆண்டு பணி முடித்ததும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆனால், 12 ஆண்டுகளை கடந்தும் பதவி உயர்வின்றி தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: பணியில் சேர்ந்து 10ஆண்டிற்கு மேலானதால் இன்ஸ்பெக்டருக்கு நிகரான சம்பளம் பெறுகிறோம். எங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதால், அரசுக்கு நிதி சுமை ஏற்பட வாய்ப்பில்லை. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
நிதி நிறுவனம் முற்றுகை:
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி எஸ்.எம்.சி. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள். பணம்செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்த பின்பும் பணம் தர மறுப்பதால், முற்றுகை போராட்டம் நடை பெற்றது.ஜந்து மணிநேரமாக தொடரும் போராட்டம் ஆகும்.