இழப்பீடு வழங்கும் முன் மரங்களை வெட்டிய அரசு அதிகாரிகள்: விவசாயி குமுறல்
கொடை ரோடு அருகே, உரிய இழப்பீடு வழங்கும் முன்பே விவசாயி வளர்த்து வந்த, செம்மரங்களை வனத்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு அருகே, உரிய இழப்பீடு வழங்கும் முன்பே விவசாயி வளர்த்து வந்த, செம்மரங்களை வனத்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டியுள்ளனர்.
ஜல்லிபட்டி பிரிவு அருகே புதிய 4 வழிச்சாலை அமைக்க, இடையூறாக இருந்த, 8 செம்மரங்களை அகற்ற நில எடுப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், இழப்பீடாக ரூபாய் 80 இலட்சம் வழங்க வலியுறுத்தி, விவசாயி ஜெயக்குமார் போராடி வந்தார். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், ரூபாய் 4 லட்சம் மட்டுமே, இழப்பீடு வழங்குவதாக கூறி வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை திடீரென, மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவு எனக்கூறி வனத்துறையினர், காவல்துறையினர் உதவியுடன், 30-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர், செம்மரங்களை வெட்டி அகற்றினார். உரிய இழப்பீடு வழங்காமல், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரங்களை வெட்டி சாய்த்த போது விவசாயி ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் தடுக்க முயன்றனர் இருப்பினும் செம்மரங்களை வெட்டி சாய்த்தனர்.