வாக்காளர் அடையாள அட்டையை தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு
மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அடையாள அட்டையை அனுப்பி இருக்கிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 976 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வந்துள்ளது. இந்த வாக்காளர் அடையாள அட்டை தபாலில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில் பழனி தொகுதியில் 1,947 பேருக்கும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2,185 பேருக்கும், ஆத்தூர் தொகுதியில் 1,755 பேருக்கும், நிலக்கோட்டை தொகுதியில் 1,600 பேருக்கும், நத்தம் தொகுதியில் 1,282 பேருக்கும், திண்டுக்கல் தொகுதியில் 2,363 பேருக்கும், வேடசந்தூர் தொகுதியில் 1,844 பேருக்கும் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
150 ரூபாயில் கொடைக்கானல்.. குறைந்த செலவில் சுற்றுலா செல்ல ரெடியா:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், உள்ள 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. இந்த சுற்றுலா பேருந்து திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலக்குண்டுவிலிருந்து, கொடைக்கானலுக்கு இயக்கப்படுகின்றன. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் முன்பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் காடுகள், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, கால்ஃப் மைதானம், பாம்பார் ஆறு காட்சி, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, லேக் (டிராப்) ஆகிய 12 சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும்.இந்த 12 இடங்களுக்கும், அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். இந்த டூர் பேக்கேஜ் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இருக்கும் என்று போக்குவரத்துக்கழகம்அறிவித்துள்ளது.