நத்தம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சமைப்பதற்காக மந்தையில் தண்ணீர் பிடிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
திண்டுக்கல் மாவட்டம் ,நத்தம் அருகே லிங்கவாடியில் கோயில் காளை நினைவு நாளுக்காக சமைக்க தண்ணீர் எடுத்து வந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் லிங்கவாடியைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் செல்வகனேஷ்(24) கூலித்தொழிலாளி .இவர் அப்பகுதியில் முத்தாலம்மன் கோவில் கோவில் காளையின் 22வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவிற்க்கு சமைப்பதற்கான வேலை நடைபெற்று வந்துள்ளது.
இதற்காக ஊர் மந்தையில் அமைக்கப்பட்ட சமையல் கூடத்தில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது.செல்வகணேஷ் சமைப்பதற்காக மந்தையில் தண்ணீர் பிடிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் காவல்துறையினர் செல்வகணேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நத்தம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.கோவில் காளையின் நினைவு நாளை கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட சமையல் கூடத்தில் மின்கசிவு காரணமாக இளைஞர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.