திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - ஆர்டிஓ விசாரணை
திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தாளக்கடை பகுதியை சேர்ந்த சரவணன், இவரது மனைவி செல்வராணி(22). இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக செல்வராணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள். ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.