நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நத்தத்தில் அதிமுக ஆலோசனை
கூட்டத்தில் 18 வார்டுகளுக்கும் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக அதிமுக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்தது..கூட்டத்தில் 18 வார்டுகளுக்கும் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது: நத்தம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 18 வார்டுகளிலும் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும், இதற்காக வைராக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் கட்சியினர் செயல்பட வேண்டும்.நத்தம் அதிமுக கோட்டை என்பதை இந்த பேரூராட்சி தேர்தல் மூலம் மீண்டும் உறுதிபடுத்துவோம், கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு எந்த வித பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற செய்ய வேண்டும். நத்தம் பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகதான் கைப்பற்றும் என்றார் அவர்.