நத்தம் போக்குவரத்து பணிமனையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு முன் வரவேண்டும்;
நத்தம் போக்குவரத்து பணிமனை முன்பாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு ) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் போக்குவரத்து பணிமனை முன்பாக, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, கிளை தலைவர் லாசர் தலைமை வகித்தார். மத்திய சங்க துணை செயலாளர் வெங்கிடுசாமி தொடக்க உரையாற்றினார். மத்திய சங்க துணை செயலாளர் ரூபன் அம்புரோஸ். கிளை செயலாளர் சந்திரன் சிறப்புறையாற்றினர். இதில், பொருளாளர் வெள்ளைச்சாமி, துணைச் செயலாளர் சின்னதுரை, ஓய்வுபெற்ற நல அமைப்பினர் ராஜகோபால், சிபிஎம். தாலுகா செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மத்திய சங்க தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.