அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தம்

நடத்துனர் சகஸ்ரநாமத்தை தாக்கியதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

Update: 2021-11-17 12:45 GMT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்  பேருந்து நிலையத்தில்  நடத்துனர் தாக்கப்பட்டதைக் கண்டித்து திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள்

நத்தத்தில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி இரண்டு மணி நேரமாக போக்குவரத்துக்கழக ஊழியர்கள்  திடீர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டதால்  பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர்  சகஸ்ரநாமம்(56 ).  இவர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக நத்தம் பேருந்து நிலையத்திற்கு சுமார் 9 மணி அளவில் வந்துள்ளார். .அப்பொழுது பேருந்தை நிறுத்துவதற்காக நத்தம் பேருந்து நிலையத்தில் உள்ள ட்ராக்கில் பேருந்தை பின்னோக்கி இயக்கும் போது, நத்தம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன காப்பகம் நடத்திவரும் கோபி என்பவர், தனது காரை பேருந்தின் பின்புறம் ஓட்டிச்செல்ல முயற்சித்தாராம்.  அப்பொழுது நடத்துனருக்கும், காரை ஓட்டி வந்த கோபி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபி, நடத்துனர் சகஸ்ரநாமத்தை  தாக்கியதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை கேள்வியுறற அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதியம் சுமார் 11.30 மணியிலிருந்து அரசு பேருந்துகளை இயக்காமல் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, சுமார் 2 மணி நேரம் எந்த ஊருக்கும் அரசு பேருந்துகள் செல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர், நடத்துனரை தாக்கிய, கோபி என்பவரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் உறுதியளித்ததையடுத்து, மீண்டும் போக்குவரத்து சேவை தொடர்ந்தது. நத்தம் பகுதியில் அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கியதைக் கண்டித்து பேருந்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால்  அப்பகுதி  பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News