மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி: 3ம் நாளாக மாணவர்கள் சாதனை

நத்தம் என்டிஆர் கல்லூரியில் மூன்றாம் நாளாக மாநில அளவிலான முப்பத்தி ஐந்தாவது ஜூனியர் தடகளப் போட்டி நடைபெற்றது.;

Update: 2021-12-11 02:20 GMT

நத்தம் என்டிஆர் கல்லூரியில் மூன்றாம் நாளாக மாநில அளவிலான முப்பத்தி ஐந்தாவது ஜூனியர் தடகளப் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் 35வது மாநில ஜூனியர் தடகள போட்டிகள் நத்தம் என்பிஆர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் திண்டுக்கல், சென்னை, கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட 4000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மூன்றாவது நாளான இன்று 600 மீட்டர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வீரர்-வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற போற்றிகள் 200 புள்ளிகள் பெற்று சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்தது. 141 புள்ளிகள் பெற்று கோவை மாவட்டம் 2வது இடத்தையும் பிடித்தது 116 புள்ளிகள் பெற்று திருநெல்வேலி மாவட்டம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

இன்று நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜிதின் அர்ச்சுனன் என்ற வீரர் 7.42 வினாடிகளில் போட்டியின் தூரத்தை கடந்து மாநில அளவிலான புதிய மாநில சாதனையை படைத்தார்.

20 வயதிற்கு மேற்பட்ட 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன் 10.50 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையை படைத்தார்.

இதேபோல் தடை தாண்டும் ஓட்டம் குண்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் 8 புதிய மாநில சாதனையை படைக்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மாநில தடகள சங்க செயலாளர் இணைச் செயலாளர் உஸ்மான், நத்தம் ராம் சன்ஸ் பள்ளி தாளாளர் ராமசாமி, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.

Tags:    

Similar News