தொடர்மழையால் திராட்சை பழங்கள் அழுகி வீணாகும் நிலை: விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர்

Update: 2021-11-17 12:45 GMT

தொடர் மழையால் திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் வெடித்துச்சிதறும் திராட்சை பழங்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழையால் திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது .சமீபத்தில் இந்த பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுகின்றன .

வழக்கமாக திராட்சை சாகுபடியின்போது ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும் . இதற்காக விவசாயிகள் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து உரம் , பூச்சி மருந்து தெளித்து சாகுபடி செய்து இருந்தனர் .இந்தநிலையில் திராட்சை பழங்கள் மழையால் அழிவுக்கு உள்ளாகியதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர் . இதனால் திராட்சை விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .எனவே விவசாயிகள் திராட்சை பழங்களை மாடுகளுக்கு தீவனமாக வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது .

Tags:    

Similar News