கோழிக்கழிவு கொட்ட வந்த டிப்பர் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நத்தம் அருகே பாப்பாரப்பட்டியில், குப்பை மற்றும் கோழி கழிவுகளை கொட்ட வந்த டிப்பர் லாரியை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-08 00:00 GMT

லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

நத்தம் அருகே பாப்பாரப்பட்டியில்,  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் கொட்டுவதற்காக,  நத்தம் பேரூராட்சி பகுதியில் இருந்து குப்பை, கோழிக்கழிவுகளுடன் டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.

குப்பையை கொட்டும்போது,  அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து,  பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், இரவில் கழிவுடன் வந்த லாரியை சிறைப்பிடித்து,  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்,  பொதுமக்களிடம் இனி கழிவுகள் இங்கு கொட்டப்படாது எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். குப்பை மற்றும் கழிவுடன் டிப்பர் லாரி சிறைபிடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News