அகதிகள் முகாமிற்கு நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு

கிராமப்பகுதியில் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை.

Update: 2021-08-27 10:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செங்குறிச்சி அருகே உள்ளது பூசாரி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைவரும் விவசாய கூலியாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். மேலும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உழவு செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கிராம மக்களின் ஆடு, மாடு மேய்ச்சல் நிலங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது அதே பகுதியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டி தருவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி மன்றம் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களை பட்டா போட்டுக் கொடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிராமப்பகுதியில் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும், மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய கூடம் பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News