ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுக்காக காத்திருந்த மாடு பிடி வீரர்கள், உரிமையாளர்கள்

ஆன்லைன் பதிவுக்கான சர்வர் வேலை செய்யவில்லை என்று மாடு உரிமையாளரகளும், மாடுபிடி வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்;

Update: 2022-01-12 00:15 GMT

 நத்தத்தில் உள்ள இ - சேவை மையங்களில் காலையிலிருந்தே காத்திருந்தனர்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள இ-சோவை மையங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்களும் மாடு உரிமையாளர்களும் வெகுநேரமாக காத்திருந்து  ஆன்லைனில் பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைனில் பதிவு  செய்வதற்காக  காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் நத்தத்தில்  உள்ள இ - சேவை மையங்களில் காலையிலிருந்தே காத்திருந்தனர். கொரோனா ஊசி 2 டோஸ் போட்டால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளலாம் என்றனர். இப்போ ஆன்லைனில் பதியவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் காலையில் இருந்து 5மணிவரை ஆன்லைன் பதிவுக்கான சர்வர்  வேலை செய்யவில்லை என்று மாடு உரிமையாளரகளும், மாடுபிடி வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News