மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா

மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்.

Update: 2022-01-06 02:59 GMT

மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்தினர்.

நத்தம் அருகே மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூரில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி கணபதி ஹோமம், கலச பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. அதையடுத்து ஐய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News