நத்தத்தில், நத்தம் விஸ்வநாதனை கண்டித்து அவரது உருவ பொம்மை எரிப்பு

நத்தத்தில், நத்தம் விஸ்வநாதனை கண்டித்து அவரது உருவ பொம்மையை அமுமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-21 08:32 GMT

நத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் நத்தம் விஸ்வநாதன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும்  நத்தம் தொகுதி எம்எல்ஏவாகவும்  நத்தம் விஸ்வநாதன் இருக்கிறார். 

சனிக்கிழமை அன்று திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கும் அண்ணா திமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை. அவரை தொலைபேசியில் அல்லது வேறு எந்த ஒரு விதத்தில் தொடர்பு கொண்டால் அவர்கள்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுக்கப்படுவார்கள்  என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் "சசிகலா தாய் இல்லை அவர் ஒரு பேய். அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ். சுமந்து செல்ல நாங்கள் ரெடியாக இல்லை" என்று அவரை ஒருமையில் பேசினார். இதனால் அதை  கண்டித்து இன்று நத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள்,  நத்தம் விசுவநாதனை கண்டித்து நத்தம் பேருந்து நிலையம் அருகே விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உருவபொம்மையில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News